மிரட்டியதா ccv? செக்கச்சிவந்த வானம் படத்தின் திரை விமர்சனம்

பிரகாஷ் ராஜ் ஊரையே கதிகலங்க வைக்கும் ஒரு கேங்ஸ்டர், அவர் உயிருக்கு ஆபத்து, அதனால் அடுத்த பிரகாஷ் ராஜ் யார்? அதாவது அவர் இடத்திற்கு யார்? என்பதே போட்டி.

இந்த போட்டியில் அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு மோத கடைசியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

அரவிந்த்சாமி படத்தின் 4 கதாபாத்திரங்களில் கை ஓங்கி நிற்பது இவருக்கு தான், முரடன் அப்பா சொல்வதை மட்டுமே கேட்டு சுதந்திரம் என்றே இல்லாமல் அடிதடி என்று வாழ்ந்தே, வாழ்க்கையை ஓட்டுகின்றார், அவர் அப்பாவின் இடத்தை பிடிக்க விரும்புவது, அதற்கான விஷயங்களை மேற்கொள்வது, அதன் இழப்பு, சோகம், வருத்தம் என செம்ம ஸ்கோர் செய்கின்றார்.

சிம்பு கடைக்குட்டி, அண்ணனால் தனக்கு ஒரு வலை சுற்றப்படுகின்றது என அறிந்து அவர் ஒரு கேங்கை தேற்றி களத்தில் இறங்குகின்றார், நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவிற்கு பல எமோஷனில் நடிக்கும் ஒரு வாய்ப்பு, அதுவும் தன் அம்மாவிடம் ‘நீ எனக்கு மட்டும் அம்மாவா இருமா’ என்று அழும் இடத்தில் சூப்பர். இந்த சிம்பு தான் இத்தனை நாட்கள் மிஸ்ஸிங்.

விஜய் சேதுபதி அட மணிரத்னம் படத்தில் மீண்டும் ஒரு வைலன்ஸ் சைட் மௌனராகம் கார்த்திக் என்றே சொல்லலாம், அவருக்கே உரிய ஸ்டைலில் வசனத்தில் வரும் காட்சிகளில் எல்லாம் சிக்ஸர் தான், கடைசி வரை ‘நீங்க நல்லவரா, கெட்டவரா?’ என்று ஆடியன்ஸ் கேட்கும்படியே அவர் கதாபாத்திரம் கொண்டு போனது ரசிக்க வைக்கின்றது.

இன்றும் தான் இடன் தனக்கு தான் என நிரூபிக்கின்றார், ‘இதெல்லாம் எதுக்கு சொடக்கு போட்டால் இந்த உயிர் இப்படி போய்டும், நீ நான், நாளைக்கு பிறக்க போறவன் வரைக்கும் சைபர்’ தான் என வரும் வசனம் எல்லாம் ஆயிரம் அர்த்தம்.

ரகுமானின் பின்னணி இசை தெறிக்கின்றது, அதிலும் பூமி பூமி பாடலை அவர் கையாண்ட விதம் கலக்கல், சந்தேஷின் ஒளிப்பதிவில் சென்னை, துபாய், செர்பியா என நாமே சென்று வந்த அனுபவம்.

செக்கச்சிவந்த வானம் மணிரத்னத்தின் மற்றொரு மாஸ்டர் பீஸ்.

ரேட்டிங்: 3.5/5.0