‘எல்கேஜி’ திரைவிமர்சனம்

நடிகர் RJ பாலாஜி சினிமாவுக்கு வரும் அளவுக்கு பிரபலமாக காரணம் அவர் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் போது மக்களை அதிகம் ஈர்த்த காமெடி தான்.

சினிமாவில் முதலில் காமெடியனாக அறிமுகமான அவர் தற்போது சோலோ ஹீரோவாக ஒரு அரசியல் நையாண்டி படத்தில் நடித்துள்ளார்.

அவர் மற்றும் பிரியா ஆனந்த் நடித்துள்ள LKG படம் எப்படி இருக்கிறது வாருங்கள் பார்க்கலாம்..

கதை:

லால்குடியில் இருக்கும் ஒரு ஊரில் கவுன்சிலராக இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி. இது போதாது இன்னும் தன் அரசியல் பயணத்தில் அடுத்தக்கட்டத்தை அடைய வேண்டும் என முயற்சி செய்கிறார். ஊரில் இருப்பவர்களின் வாக்குகளை பெற அவர் ஓடி ஓடி உழைக்கிறார்.

தமிழக முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார். அந்த நேரத்தில் அரசியல்வாதிகளை ப்ரோமோட் செய்யும் ப்ரியா ஆனந்தின் உதவியுடன் பாலாஜி இந்தியா முழுதும் ட்ரெண்ட் ஆகின்றார்.

முதல்வர் இறந்த பிறகு இடைத்தேர்தல் வாய்ப்பு பாலாஜிக்கு வர, ஆனால், அவரை எதிர்த்து அதே கட்சியில் பெரிய ஆளாக இருக்கும் ஜே கே ரித்திஸ் மோதுகிறார். அதை தொடர்ந்து என்ன ஆகிறதே என்ற அரசியல் அதகளம் தான் இந்த எல் கே ஜி.

ஆர் ஜே பாலாஜி முன்பே சொன்னது போல் தனக்கு என்ன வருமோ அதை அறிந்து சூப்பராக செய்துள்ளார். தன்னோட பலம் காமெடி என்பதை அறிந்துக்கொண்டு ஒரு காட்சி எமோஷ்னலாக ஸ்கோர் செய்தாலும் அடுத்த சீனே காமெடி கவுண்டர் கொடுத்து அதை மேட்ச் செய்து அசத்துகிறார்.

ப்ரியா ஆனந்த் கார்ப்ரேட்டில் வேலை செய்பவர். அமெரிக்காவில் இருப்பது போல இந்தியாவிலும்
அரசியலுக்கு என்று விளம்பர யுக்திகளை கையாள தனி கார்ப்பரேட் கம்பெனிகள் உள்ளன. அதில் நடக்கும் விஷயங்களை அப்படியே கண் முன் கொண்டுவருகிறார்கள்.

படத்தின் முதல் பாதி காமெடி, அரசியல் என அனைத்தும் கச்சிதமாக செல்ல, இரண்டாம் பாதி ஜே கே ரித்திஸுடனான மோதல் கொஞ்சம் தடுமாற, கிளைமேக்ஸ் அட என்னயா இது முதல்வன் படம் போல் பாலாஜி இவ்வளவு சீரியஸாக இருக்கிறாரே என நினைக்க, அங்கு வைத்த ஒரு காட்சி செம்ம கலக்கல்.

பாசிட்டிவ் & நெகடிவ்:

+நம் வாழ்க்கையில் பார்த்த அல்லது சந்தித்த சம்பவங்கள் தான் அப்படியே படத்தில் உள்ளது. அதனால் நம் எண்ணங்களை எளிதில் கவர்ந்துவிடுகிறது படம்.

+அசால்ட்டாக நடிப்பில் கலக்கியிருக்கும் ஆர்ஜே பாலாஜி.

ஒரு கட்சியை மட்டும் LKG அதிகம் விமர்சித்திருக்கிறது. எல்லா அரசியல் காட்சிகளையும் தாக்கியிருந்தால் இந்த் கேள்வி வந்திருக்காது.

தடுமாறும் இரண்டாம் பாதியின் திரைக்கதை.

Verdict : ஆர்ஜே பாலாஜி LKGயில் நூற்றுக்கு நூறு.

Rating: 3.25/5.0