சாமி 2 படத்தின் முழு திரை விமர்சனம்

ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் மீண்டும் போலீஸ் அவதாரம் எடுத்துள்ள படம் தான் இந்த சாமி 2. படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா வாருங்கள் பார்ப்போம்.

கதை

சாமியின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்கின்றது. பெருமாள் பிச்சையின் மகன் ராவன பிச்சை பாபி சிம்ஹாவிடம் திருநெல்வேலி கண்ட்ரோலுக்கு செல்கின்றது.

அதன் பின் மகன் விக்ரம் ராம் சாமி மீண்டும் திருநெல்வேலி க்கு சார்ஜ் எடுத்து எப்படி ராவன பிச்சையை அளிக்கின்றார் என்பதே கதை. இடையில் ஆறுச்சாமிக்கு என்ன ஆனது என்பதும் கூடுதல் சர்ப்ரைஸ்.

விக்ரம் ஒன் மேன் ஷோ என்று சொல்லலாம், மனுஷன் ஆடல், பாடல், அதிரடி என அடித்து தூள் கிளப்புகின்றார். அதிலும் ஆறுச்சாமி எண்ட்ரீ தியேட்டர் அதிர்கின்றது.

படத்தின் இடைவேளை காட்சியே ஏதோ கிளைமேக்ஸ் போல் உள்ளது, படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக இருந்தாலும் இடைவேளையில் இருந்து ஹரி பட டெம்ப்ளேட்டுக்கு மாறுகிறது.

அதன் பிறகு ஜெட் வேகம் தான், இதற்கிடையில் பாடல்களும் சூரி காமெடியும் பொறுமையை சோதிக்கின்றது. ஆனால் அதுவும் பி சி செண்டர் ஆடியன்ஸ் ரசிப்பார்கள்.

அதிலும் பாபி சிம்ஹா மிரட்டுகின்றார். பெருமாள பிச்சைக்கு ஈகுவலாக இல்லையென்றாலும் ஓரளவிற்கு மெட்ச் செய்கின்றார். கொஞ்சம் வன்முறை அதிகம் அவ்வளவு தான்.

த்ரிஷா இல்லையென்பது கொஞ்சம் வருத்தம் தான், ஆனாலும் ஐஸ்வர்யாவும் தன்னால் முடிந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

படத்தின் மிகப்பெரும் குறை தேவி ஸ்ரீ இசை தான். ஹாரிஸை மிகவும் மிஸ் செய்கிறோம் ஹரி சார். அதே போல் ப்ரியனின் ஒளிப்பதிவையும் தான்.

மொத்தத்தில் சாமி2 பி சி ரசிகர்களுக்கு கமர்ஷியல் விருந்து.

ரேட்டிங்: 3/5