சண்டக்கோழி 2 திரைவிமர்சனம்

விஷால்-லிங்குசாமி கூட்டணியில் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்துள்ளது.

அஞ்சான் படுதோல்வியால் அதள பாதாளத்துக்கு சென்ற இயக்குனர் லிங்குசாமியின் கேரியர் மீண்டு வந்ததா.. பாப்போம்.. தொடர்ந்து படியுங்கள்.

கதைக்களம்:

படத்தின் ஆரம்பத்திலேயே பிரமாண்ட மாக ஊர் திருவிழா நடக்கின்றது. இதில் சாப்பாடு பரிமாறுவதில் பிரச்சனை நடந்து வரலட்சுமியின் கணவர் ஒருவரை வெட்டி சாய்கின்றார்.

அந்த இரத்த ஈரம் காய்வதற்குள் வரலட்சுமி கணவரையும் வெட்டுகின்றனர். அப்போதே வரலட்சுமி தன் கணவரை கொன்றவர்கள் குடும்பத்தில் இருப்பவர் அனைவரையும் வெட்டி சாய்க்க ஒருவர் மட்டும் மீதம் இருக்கின்றார்.

பிறகு 7 வருடங்களுக்கு பிறகு திருவிழா மீண்டும் நடக்க, அந்த மீதம் ஒருவரை வரலட்சுமி கொல்ல காத்திருக்க, இதை விஷால் எப்படி முறியடித்தாரா என்பதே மீதிக்கதை.

மொத்தத்தில் லிங்குசாமி விட்டதை பிடித்துவிட்டார்.

ரேட்டிங்: 3.0/5.0