வடசென்னை தனுஷ நடிப்பில் பிரமாண்ட ஆக வெளிவந்துள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருக்க, அதை பூர்த்தி செய்ததா பார்ப்போம்.
வடசென்னையில் நடக்கும் அரசியல் இது தான் படத்தின் ஒன் லைன். செந்தில்(கிஷோர்) குணா(சமுத்திரக்கனி) இருவதும் ஆரம்பத்திலேயே ஒரு கொலையை செய்கின்றனர். அந்த கொலையில் இருந்தே பல அரசியல் பிறக்கின்றது.
அதன் பின் செந்தில் குணா இருவரும் பிரிந்து தங்களுக்கென்று ஒரு கேங்கை உருவாக்கி ஒருவரை ஒருவர் கொலை செய்ய துடிக்கின்றனர்.
அந்த நேரத்தில் தனுஷ் (அன்பு) கேரம் ப்ளேயராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்க இந்த கேங் வாருக்குள் யதார்த்தமாக உள்ளே வர அதை தொடர்ந்து யார் கொடி வடசென்னையில் பறக்கின்றது, ஆரம்பத்தில் செந்தில் குணா யாரை கொலை செய்தார்கள், தனுஷ் தன்னை சூழ்ந்த பிரச்சனைகளை எப்படி தீர்க்கின்றார் என்பதை படமாக இல்லை பதிவாக செய்துள்ளது இந்த வடசென்னை.
தனுஷ் கெரியர் பெஸ்டாக இந்த படத்தை சொல்லலாம், அந்த அளவிற்கு சிரத்தை எடுத்து நடித்துள்ளார்.
அவர் மட்டுமின்றி அமீர் சமுத்திரக்கனி கிஷோர் பவன் என அனைவரும் வாழ்ந்து தான் உள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் படம் மேலும் வலு பெறுகிறது, வேல்ராஜின் ஒளிப்பதிவும் அப்படியே.
வடசென்னை மக்களின் வாழ்க்கை பதிவை அப்படியே வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
4/5