வந்தா ராஜாவாதான் வருவேன் திரைவிமர்சனம்

வெளிநாட்டில் கொடிகட்டி பறக்கும் பணக்காரராக இருக்கும் சிம்பு தன் தாத்தா நாசரின் ஆசையை நிறைவேற்ற இந்தியா வருகிறார்.

அவரின் அத்தை ரம்யா கிருஷ்ணா கோபத்தை தனித்து பிரிந்து குடும்பத்தை சிம்பு ஒன்று சேர்த்தாரா என்பதே வந்தா ராஜாவா தான் வருவேன்.

சிம்பு சும்மா படம் முழுதும் ஒன் மேன் ஆர்மியாக கலக்கியுள்ளார். அதிலும் இந்தியா வந்த பிறகு ரோபோ ஷங்கருடன் அடிக்கும் கலாட்டா, மேகா ஆகாஷுடன் கலாய், கேத் ரினுடன் ஆட்டம் என அடிச்சு தூள் கிளப்புகிறார்.

படத்தின் மிகப்பெரும் பலம் காமெடி காட்சிகள் தான் யோகி பாபு மிரட்டியுள்ளார், அதிலும் சிம்புவிடம் அவர் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தை செம்ம கலக்கல்.

ஹிப்ஹாப் ஆதியின் இசை யூத் ஆடியன்ஸை கவர்கிறது. அதிலும் எனக்கா ரெட் கார்ட் செம்ம அடி.

படத்தின் பலவீனம் என்றால் கொஞ்சம் லாஜிக் மீறல். அதை கவனித்திருக்கலாம். ஆனால் தெலுங்கிலும் இதே தானே.

மொத்தத்தில் சிம்பு ராஜாவா அரியனை ஏறினார்.

ரேட்டிங்: 3.25/5.0