நோட்டா திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் அரசியல் படங்கள் தலை காட்டும், அப்படி அமைதிப்படை போன்ற ஹிட் அடித்த படம் ஒரு சிலவையே, அந்த வரிசையில் களம் கண்டுள்ள படம் தான் நோட்டா.

டம்மி முதலமைச்சராக அவருடைய மகன் விஜய் தேவரகொண்டாவை அந்த பதவியில் பதவியேற்க வைக்கின்றார்.

ஆனால், அவருக்கோ அரசியலில் அ, ஆ கூட தெரியவில்லை. இரண்டு வாரத்தில் நாசருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நினைக்கின்றனர்.

யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்க, அடுத்த 5 ஆண்டுக்கு விஜய் தேவரகொண்டா முதலமைச்சர் என அறிவிக்க அதன் பிறகு அவரின் அதிரடி தான் இந்த நோட்டா.

இந்த விஜய் தேவரகொண்டா தென்னிந்தியாவின் எந்த மொழிகளில் கூட நடிக்க வைக்கலாம் போல, எந்த ஒரு பிசிறி தட்டாமல் தமிழில் டப்பிங் பேசி கலக்கியுள்ளார்.

தமிழகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளையும் அப்படியே கதையாக மாற்றியுள்ளனர். வாரிசு அரசியல், குணிந்து கும்புடு போடுவது, செம்பரபாக்கம் ஏரியை திறந்துவிடுவது, கூவத்தூர் ரிசார்ட் கொண்டாட்டம் என நிகழ்கால அரசியலை கண்முன் கொண்டு வந்துள்ளனர்.

அதே நேரத்தில் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறுகின்றது, அதிலும் கிளைமேக்ஸ் எப்படி முடிப்பது என்று தெரியாமல் என்று முழிப்பது தெரிகின்றது.

சாம் சி எஸின் இசை தாறு மாறு, படத்தின் மறைமுக ஹீரோ அவர் தான்.

நோட்டா விஜய் தேவரகொண்டாவிற்காக கண்டிப்பாக விசிட் அடிக்கலாம்.

ரேட்டிங்: 2.75/5.0